தரிசனம்


Notice: Undefined index: page_header in /homepages/40/d831982196/htdocs/clickandbuilds/MiracleFamilyTemple/wp-content/themes/Glorious/single.php on line 30

Notice: Trying to access array offset on value of type null in /homepages/40/d831982196/htdocs/clickandbuilds/MiracleFamilyTemple/wp-content/themes/Glorious/single.php on line 30

Sunday December 12, 2021 - Bible Study

உலகம் முழுவதிலும் மறுபடியும்பிறந்த விசுவாசிகள் அழிந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். இல்லை… அவர்கள் பாவத்தில் அழிந்துபோகவில்லை.  ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருச்சபை ஆராதனைகளில் கலந்துகொள்கிறார்கள். வேதாகமத்தை படிக்கிறார்கள். திருச்சபைத் தலைவர்களாகக்கூட இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆவிக்குரிய நிலையில் மரித்துக்கொண்டிருக்கிறார்கள்.  விசுவாசிகள் என்ற நிலையில் அவர்கள் வழக்கமான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆவிக்குரிய பரவசம் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு குறிக்கோளோ அல்லது நோக்கமோ இல்லை. அவர்களுக்கு எந்த தரிசனமும் இல்லை.

நாம் பேசுகிற தரிசனம் என்பது ஒரு கனவில் (டிரான்ஸ்) வெளிப்படையாக தெரியும் ஒன்றல்ல. அது இயற்கை பார்வையும் இல்லை. அது ஒரு ஆவிக்குரிய தரிசனமாக உள்ளது. ஆவிக்குரிய வாழ்வில்  இறந்தநிலையில் இருக்கும் ஆண்களையும் பெண்களையும், தேவன் ஆவிக்குரிய நிலையில் உயிரோட்டமுள்ளவர்களாய் மாற்றுகிறார். தரிசனம் என்பது வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தையும் திசைகாட்டுதல்களையும் கொடுக்கிறது. அது உண்மையான திருச்சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்தை பொதுவான நோக்கத்தில் இணைக்கிறது.

“தரிசனத்தை” எவ்வாறு சரியாக விளக்கிச் சொல்லலாம்?

தரிசனம் என்பது ஒரு படமாக உள்ளது. அதாவது, நாம் அவருடைய வழியை விட்டுச் செல்லும்போது, அவர் திரும்ப தமது வழிக்கு நம்மை திருப்புவதாகும். ஸ்டீபன் கோவி, “சகலமும் இருமுறை சிருஷ்டிக்கப்படுகின்றன,” என்று எழுதியுள்ளார். முதலாவது சிந்தையில் சிருஷ்டிப்பு. இரண்டாவது பௌதீக சிருஷ்டிப்பு. தரிசனம் என்பது இந்த முதலாவது சிருஷ்டிப்பைப் பற்றியதாகும். நாம் அதை உண்மையில் வடிவமைக்கு முன்பு, நாம் அதைப் பார்க்க வேண்டும்.  கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் தரிசனம் என்பது, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், தேவன் நம்மை எங்கு அனுப்புகிறார், தேவன் நம்மை என்ன செய்யச் சொல்கிறார், என்பதை தெளிவாக பார்த்து, அதை சரியாக சொல்வதாகும். தரிசனம் என்பது நிகழ்கால மற்றும் எதிர்கால உண்மைத்தன்மை அல்லது யதார்த்தத்திற்கு இடையே உள்ள பாலமாகும்.

தரிசனம் என்ற ஆங்கில வார்த்தை “பார்ப்பது” என்று பொருள்படும். இது videre என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது.

  1. தரிசனம் என்ற வார்த்தைக்கு நவீன மொழியில் பல அர்த்தங்கள் உள்ளன.
  2. மனித உடலில் உள்ள பார்க்கும் திறன்
  3. பார்க்கக்க் கூடிய செயல் அல்லது வல்லமை
  1. தலைமைதத்துவத்தை சொல்லும்போது தரிசனம் என்ற வார்த்தை விநோதமானது.
  2. நிதானிப்பதில் அல்லது கருத்துக்களை உணர்ந்துகொள்வதில் அசாதாரண திறன்
  3. நுண்ணறிவுள்ள தொலைநோக்கு பார்வை
  1. தரிசனம் என்ற வார்த்தைக்கு ஒரு தீர்க்கதரிசன அம்சமும் உள்ளது.
  2. மனித சிந்தைக்கு கிடைக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு வெளிப்பாடு
  3. ஒரு கனவில், டிரான்ஸில் அல்லது மெய்மறந்த நிலையில் பார்ப்பது

ஆவிக்குரிய தரிசனம் என்றால் என்ன?

ஆவிக்குரிய தரிசனம் என்பது, இயற்கை  உலகத்திற்கு அப்பால், ஆவிக்குரிய  உலகத்திற்குள் பார்ப்பதாகும். இது தேவனுடைய தெய்வீக நோக்கத்தை புரிந்துகொண்டு, அவரது திட்டதில் உங்களுடைய பங்கை அங்கீகரிப்பதாகும்

ஏன் ஆவிக்குரிய தரிசனம்?

ஏன் ஆவிக்குரிய தரிசனம் அவசியமாகிறது? ஏன் மக்கள் அதில்லாமல் அழிகிறார்கள்?

அதற்குரிய பதில், ஆவிக்குரிய தரிசனத்தின் அனேக வேதாகம உதாரணங்கள் ஒன்றில் தெளிவாக  காணப்படுகிறது. II இராஜாக்கள் 6: 15-17 ஆகிய வசனங்களில் உள்ள, தீர்க்கதரிசியாகிய எலிசா மற்றும் அவரது வேலைக்காரனாகிய கேயாசியின் நிகழ்ச்சியைப் படிக்கவும்.

தேவனுடைய ஜனமாகிய இஸ்ரவேலரை எதிரி நாடான சீரிய, சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அங்கு அனேக போர்வீரர்களும், யுத்த குதிரைகளும் இரதங்களும் இருந்தன. எலிசாவின் வேலைக்காரனாகிய பலத்த சேனையை பார்த்தபோது, அவன் பயந்துவிட்டான். அவன் எலிசாவை நோக்கி சத்தமிட்டு, “நாம் என்ன செய்வோம்,”  என்றான். எலிசவோ,

(II இராஜாக்கள் 6: 16).

தரிசனத்தின் பிறப்பு: 

அபோஸ்தலனாகிய  பவுலுக்கு கொடுத்ததுபோலவே,  தேவன் உங்களுக்கும் ஒரு தரிசனத்தைக் கொடுக்க விரும்புகிறார். நோக்கத்தையும் குறிக்கோள்களையும்கூட உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறார். தரிசனத்தை நிறைவேற்ற அது உங்களை பெலப்படுத்தும். “ஒரு தரிசனத்தின் பிறப்பை” நீங்கள் அனுபவிக்கும்போது, தேவனுடைய தெய்வீக திட்டத்தில், நீங்கள் வெறும் ஒரு பார்வையாளராக அல்ல, பங்காளராக மாறிவிடுவீர்கள்.

வளர்ச்சி:

ஆவிக்குரிய ஒரு தரிசனத்தை முதலாவது நீங்கள் பெறும்போது, அது ஒரு “கரு” உருவில் இருக்கிறது. கருவானது உயிரின் அடிப்படை செல்லாக இருக்கிறது. மனித கரு வளர்சியடைவதைப்போலவே, அவரில் நீங்கள் வளரும்போது, தேவன் உங்களுடைய ஆவிக்குரிய தரிசனத்தை வளரச் செய்கிறார்.

உருவாக்கம்:

உருவாக்கம் என்றால் சிருஷ்டித்தல் என்று அர்த்தமாகும். தேவன் உங்களுடைய ஆவியில் ஒரு ஆவிக்குரிய தரிசனத்தை சிருஷ்டிக்கிறார். தேவன் பவுலுக்கு ஒரு ஆவிக்குரிய தரிசனத்தை கொடுத்தபோது, அவரே அதன் ஆதாரத்தை அடையாளம் காண்பித்தார். அவர், ————————— என்று சொன்னார். “நானே இயேசு” (அபோஸ்தலர்  26:15) பவுலின் தரிசனத்தை தேவனே உருவாக்கினார்.

கர்ப்ப வேதனை:

பிரசங்கி 5:3 சொல்கிறது:

திரளான என்ற வார்த்தையின் அர்த்தம் மாபெரும் என்பதாகும். எபிரேய அர்த்தப்படி “பிசினஸ்” என்றால் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தின்படி கர்ப்ப வேதனை (மிகக்கடினமான) என்று பொருள்படும். எனவே, ஒரு தரிசனம் அல்லது கனவு என்பது, “மாபெரும் கர்ப்ப வேதனையில்” வருகிறது. இயற்கை பிறப்பில் கர்ப்பவேதனை உள்ளதுபோலவே, ஆவிக்குரிய கர்ப்பவேதனையில் பிறக்கும் தரிசனமும் இணையாக உள்ளது. இயற்கை கர்ப்ப வேதனை என்பது, குழந்தையை பிறப்பிப்பதற்கு தீவிரமான முழு கவனத்துடனான முயற்சியின் நேரமாயிருக்கிறது. இந்த கர்ப்பவேதனையின் நேரம்  __ என்றும் அழைக்கப்படுகிறது.

ஆவிக்குரிய உலகத்திலும் இது உண்மையாயிருக்கிறது. தேவன் உங்கள் வாழ்க்கையின் முழுக்கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொள்வாராக. உங்களுடைய சொந்த பெலத்தில் நீங்கள் தரிசனத்தை பிறப்பிக்க முயற்சிசெய்தால், நீங்கள் தேவனுடைய திட்டத்தை முற்றிலும் அழித்துவிடுவீர்கள். உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் உங்களுடைய இயற்கை திறமைகளுடன், ஆவிக்குரிய தரிசனத்தை உந்தித்தள்ள நீங்கள் கதறலாம்.

மாறும்நிலை நேரம்:

இயற்கை பிறப்பு தொடர்செயலில், பிறப்பு வேதனை நேரத்தில், “மாறும்நிலை” நேரம் என்று ஒன்று உள்ளது. குழந்தை பிறப்பை அனுமதிக்கும், பிறப்புவழி குழாய் திறக்கப்படும் சற்று நேரத்திற்கு முன்பு உள்ள நேரம்தான்,  கர்ப்பவேதனையின் மிகக் கடினமான நேரம் ஆகும்.

ஆவிக்குரிய உலகத்தில், தரிசனம் பிறப்பதற்கு இது இணையாக உள்ளது. தேவன் உங்களுக்குள் ஒரு _ தரிசனத்தை பிறப்பிக்கும்போது, நீங்களும் ஒரு மாறும்நிலை நேரத்தை அனுபவிப்பீர்கள்.

பிறப்பு:

மனித கருவுக்கு இருப்பதைப்போலவே, ஆவிக்குரிய தரிசனத்தின் வளர்ச்சிக்கும் எதிர்பார்த்த ஒரு முடிவு இருக்கிறது. பிறப்புதான் அதன் முடிவு ஆகும். இயற்கையான பிறப்பின் தொடர்செயலிலும் ஆவிக்குரிய தரிசனத்தின் பிறப்பிலும், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பிறப்பதும், பிறப்பு தாமதிப்பதும், மரணத்தில் முடியும்.

ஆபிரகாமின் தரிசனம்:

தேவன்கொடுத்த தரிசனத்திற்கு தனது சுய முயற்சியின் மூலமாய்  ஆபிரகாம், தன்னுடைய சுதந்தரத்திற்கு ஒரு சுதந்தரவாளியை கொண்டுவர முயற்சித்தார். தன்னை ஒரு பெரிய ஜாதியாக மாற்ற தேவன் விரும்புகிறார் என்பதை ஆபிரகம் அறிந்திருந்தார். தனது மனைவியாகிய சாராள் மூலமாக தனக்கு ஒரு சுதந்தரவாளி வரமுடியாது என்று நினைத்தார். அதற்காக அவர் ஒன்று செய்தார். எனவே  __    (ஆதியாகமம் 16 :11) பிறந்தான்.

தேவன்:

நன்மையான எல்லாவற்றிற்கும் தேவனே ஆதாரமாயிருக்கிறார். தேவன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை வரையறுக்க அவருக்கு குணாதிசயங்கள் இருக்கின்றன. இந்த உலகத்திற்கு தேவன் எவ்வாறு இருக்கிறார் என்பதை  நமது தரிசனம் பிரதிபலிக்க அவசியமாயுள்ளது. அப்படியென்றால், தேவனுடைய தெய்வீக குணாதிசயங்களுக்கு ஏற்றபடி நமது தரிசனம் இருக்கவேண்டும். “நாம் என்ன செய்வோம், தேவனுடைய கிரியைகளை செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கும்போது, கர்த்தராகிய இயேசு,  _____________ அவர், அவர் மட்டுமே ஆதாரம் என்று சொன்னார். (யோவான்  6: 28-29).

நீங்கள் ஆயத்தமா?

பிறப்பிற்கு மாற்றம் அவசியமாயுள்ளது. இயற்கை உலகத்தில் குழந்தை கர்ப்பப் பையின் பாதுகாப்பை விட்டுவிட வேண்டும்.

நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது, பாவ பழைய வாழ்க்கையை விட்டு விட வேண்டும். உங்களுடைய எண்ணம் மற்றும் செயல் முறைமைகளை மாற்ற ஆண்டவராகிய இயேசுவை அனுமதிக்க வேண்டும்

CONTINUE NEXT WEEK